கண் அழுத்த நோயானது பார்வை நரம்பு சேதமாவதால் பார்வை இழப்பு ஏற்படுகின்றது. கண்ணில் உள்ள திரவ அழுத்தம் அதிகரிப்பதனாலும், வேறு பல காரணங்களினாலும் இந்நோய் உருவாகிறது. பழைய நிலைக்குத் திரும்ப கொண்டு செல்ல முடியாத ஒரு தீவிர கண்நோய் ஆகும்.
அதிகரித்த உள்விழி அழுத்தம் ( ) கண் அழுத்த நோய் வருவதற்கான ஒரு முக்கிய ஆபத்து காரணமாகும். சிகிச்சை பெறாத கண் அழுத்த நோய் நிரந்தரமாக பார்வை நரம்பு சேதத்தை ஏற்படுத்தக் கூடும். இதன் விளைவாக, பார்வைத்திறன் இழப்பு ஏற்பட்டு, நிரந்தரமான பார்வையின்மை உருவாகிறது.
"பதுங்கும் பார்வைத் திருடன்" என அழைக்கப்படும் இந்த பார்வை இழப்பானது ஒரு நீண்ட கால அளவில் ஏற்படுகின்றது. நோய் மிகவும் முற்றிய பின்னரே இது கவனிக்கப்படுகிறது. ஒருமுறை பார்வை இழப்பு நேர்ந்து விட்டால் பிறகு பார்வை திறனை பெறவே முடியாது. உலகெங்கும் பார்வையின்மைக்கான இரண்டாவது காரணமாக கண் அழுத்த நோய் உள்ளது. ஆரம்பக் கட்டத்திலேயே இந்த நொயை கண்டறிந்துவிட்டால், பிறகு அது மேலும் முன்னேறிச் செல்வதை தடுக்க இயலும்.
உடல் உஷ்ணம், குளிர்ந்த நீரில் குளிப்பது, காற்றோட்டமான இடத்தில் வசிப்பது, குளிர்ச்சியான உணவு வகைகளை உண்பது, குறைந்தது 8 மணி நேரம் தூக்கம், அதிக வேலைப்பளு இல்லாத வாழ்க்கை, கவலை அல்லது அச்சம் காரணமாக ஏற்படும் பதற்றம், ஓய்வின்மை, உருக்கமான மனநிலை, தனிமை, பசி, பணி, அதிகமான மாத்திரை மருந்துகள் ஆகிய காரணிகள் ஒருவருக்கு இந்த நோய் ஏற்படுவதற்கு முழு முதல் காரணமாகிறது. நாட்கள் செல்லச் செல்ல பக்கவாட்டில் பார்வை குறைபாடு ஏற்பட்டு (Field Vision) பக்கவாட்டில் மறைய ஆரம்பித்து பின்பு ஒரு ஓட்டை (Tunnel) வழியாக பார்வை இருக்கும். பலருக்கு கண்கள் கூசுதல், நடு பார்வையில் ஒரு வெள்ளைப்படலம் தோன்றுதல், நடப்பது வண்டி ஓட்டுவதில் சிரமமும் ஏற்படலாம். சிலருக்கு முழுவதுமாக பார்வை பறிபோய்விடும். இந்நோய்க்கு அக்குபஞ்சர் மருத்துவ முறைப்படி (கண் அக்குபஞ்சர் தெரபி மூலம்) சரிசெய்து விடலாம்.
